தஞ்சாவூர், அக்.14 - பண்டைய காலத்தில், கடல்சார் வணிகம் மூலம் தமிழர்களின் பொரு ளாதாரம் வளர்ச்சி அடைந்தது என இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் டி. தயாளன் பேசி னார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையைச் சார்ந்த, இந்தியப் பெருங்கடல் ஆய்வு மையம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற, “இந்தியாவும், இந்தியப் பெருங்கடல் பாரம்பரியமும்” என்ற 3 நாள் கருத்தரங்கத் தொடக்க விழா வில் அவர் பேசியதாவது: பண்டைய காலத்தில் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளுடன், தமிழ்நாடு நீண்ட காலமாக விரிவான கடல் வர்த்தக வலையமைப்பைக் கொண்டிருந்தது. அக்காலத்தில் பிற நாடுகளுடன், தமிழகம் மிகப்பெரும் கடல்சார் வர்த்தகம் மேற்கொண்டதற்கு ஆதாரமாக இத்தாலி, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம், இலங்கை, தென் கிழக்கு ஆசிய நாடுகள், தூரக் கிழக்கு நாடுகளிலிருந்து கண்டறியப் பட்ட நாணயங்கள், வளையங்கள், கண்ணாடி பொருள்கள், மண்பாண் டங்கள் உள்ளிட்டவை உள்ளன.
இதேபோல, தமிழ்நாட்டுடன் கடல் சார் வணிகத் தொடர்புடைய நாடுகளில் நம் நாட்டின் மண்பாண்டங்கள், கல் வெட்டுகள், மணிகள், சிலைகள் மற்றும் இதர பொருள்கள் காணப்படு கின்றன. இலங்கை, தாய்லாந்து, எகிப்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட முற்கால பானை ஓடுகளில் காணப்ப டும் தமிழ், பிராமி எழுத்துகள் மூலம் தமிழகத்தின் பண்டைய கடல்சார் நட வடிக்கைகளை அறிய முடிகிறது. ஐநூற்றுவர், மணிக்கிராமம், நானா தேசி, அஞ்சுவண்ணம் உள்ளிட்ட தமி ழகத்தின் வணிகச் சங்கங்கள், வணிகர்கள் கடல்சார் வணிகத்தில் மட்டுமல்லாமல் உள்நாட்டு வர்த்தகத்தி லும் முக்கியப் பங்கு வகித்தனர். மேலும், வெளிநாடுகளில் சமய, மதச்சார் பற்ற அமைப்புகளை அமைப்பதிலும், ஆதரிப்பதிலும் ஈடுபட்டனர். தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், விரிவாக்கத்துக்கும் கடல்சார் வணிகம் முக்கியப் பங்கு வகித்தது. அது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் தமிழர்கள் காலனித்துவத்தையும் கொண்டிருந்த னர். மேலும், நமது கலை, பண்பாடு உள்ளிட்டவையும் அயல்நாடுகளுக்கு பரவியது. இவ்வாறு தயாளன் கூறினார். கருத்தரங்கத்தைத் தமிழ்ப் பல் கலைக்கழகத் துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முன்னதாக கடல் சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லி யல் துறைத் தலைவர் வி.செல்வகுமார் வரவேற்றார். முனைவர் எஸ்.கௌரி சங்கர் நன்றி கூறினார்.