தஞ்சாவூர், மே 5 - வர்க்கப் போரில் உயிர் நீத்த செங்கொடி இயக்கத் தியாகிகள் வாட்டக்குடி இரணியன், ஜாம்பவானோடை சிவ ராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகி யோரின் 74-ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு ரயிலடியில் உள்ள தியாகிகள் நினைவுத் தூணுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மலர் வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தப்பட்டது.
கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டி யன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ. நீலமேகம், எம். செல்வம், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் மோரிஸ் அண்ணா துரை, ஞானசூரியன், சாமிநாதன், ஜீவா னந்தம், தியாகி இரணியன் தங்கை மகன் மகாலிங்கம், கிளைச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், பாண்டியன், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கட்சி அலுவலகத்தில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று, தியாகிகள் நினைவுத்தூண் முன்பு மரியாதை செலுத்தினர்.
வாட்டாக்குடி
மேலும், மதுக்கூர் ஒன்றியம் வாட்டாக்குடி வடக்கு ஊராட்சியில் உள்ள தியாகி இரணியன் நினைவுத் தூணுக்கு கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, செங்கொடிஏற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மதுக்கூர் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் சின்னை. பாண்டியன், மூத்த தோழரும் மாவட்டக் குழு உறுப்பினருமான ஆர்.சி. பழனிவேலு, மூத்த தோழர் ஏ.எம். வேதாச்சலம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சந்துரு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் மகாலிங்கம், வாட்டா க்குடி வடக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மெய்யநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து வாட்டாக்குடி தெற்கு, வாட்டாக்குடி இரணியன் நகர் கிளை களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.