தஞ்சாவூர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தலைமை வகித்தார். பேராவூரணி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நவீனா ரெட்டி வரவேற்றார். பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரங்களைச் சேர்ந்த 250 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழம், சத்துணவுப் பொருட்கள், சீர்வரிசை வழங்கப்பட்டன.