districts

img

அரசியல் சட்டத்தை மதித்து பாஜக ஆட்சி நடத்த வேண்டும் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேட்டி

தஞ்சாவூர், ஜூன் 7- பாஜக தன்னுடைய தவறான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். மாநிலங்கள் மீது நட வடிக்கை எடுப்பது போன்றவற்றை கைவிட்டு, அரசியல் சட்டத்தை மதித்து ஆட்சி நடத்த வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவர்  அ.சவுந்தரராசன் வலியுறுத்தினார். 

தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்  தில் ஜூன் 7, 8 ஆகிய இரு தினங்கள்  சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், மாநிலப் பொருளாளர் மாலதி  சிட்டிபாபு, மாநில துணைப் பொதுச்  செயலாளர் கே.திருச்செல்வன், மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால், மாவட்டத் தலைவர் ம.கண்  ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையொட்டி சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

நடைபெற்று முடிந்த நாடாளு மன்றத் தேர்தல் முடிவுகள், பாஜக வின் எதேச்சதிகார ஆட்சிக்கு கடி வாளமாக மாறி இருக்கிறது. பாஜக  ஆட்சி செய்த தவறுகளுக்கு தண்ட னையாகவும் இந்த தீர்ப்பை நாம்  பார்க்கலாம். கூட்டணி ஆட்சி என்று  அவர்கள் அமைத்த பிறகு ஏற்க னவே தனி பெரும்பான்மையாக இருந்தபோது அவர்கள் எடுத்த அர சியல் சட்ட விரோத நடவடிக்கை கள், காஷ்மீர் பிரச்சனை, தொழிலா ளர் சட்டத் தொகுப்புகள் பிரச்சனை,  விவசாயிகளுக்கு எதிரான சட்டம்  மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை  மறுப்பு போன்ற இந்த பிரச்சனை களில் அவர்கள் தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். மாற்றிக்  கொள்ள வேண்டும்.

அதேபோல் பழைய ஓய்வூதி யத் திட்டம் போன்றவற்றை அமல்  படுத்துவதில் இப்போது நிதீஷ் குமார் கேட்டிருப்பது போல், அக்னி  வீர் போன்ற பல பிரச்சனைகளில் இந்த அரசாங்கம் தன்னுடைய தவ றான போக்கை மாற்றிக் கொள்ள  வேண்டும். மதத்தை வைத்து மோத  விடுவது, பல சமூகத்தவர்களை மோத விடுவது, மாநிலங்கள் மீது  நடவடிக்கை எடுப்பது போன்ற வற்றையும் அவர்கள் கைவிட்டு, அரசியல் சட்டத்தை மதித்து ஆட்சி  நடத்த வேண்டும். 

அப்படி நடத்தத் தவறினால் நிச்ச யமாக இந்த பிரச்சனையில் கடுமை யான போராட்டத்தை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நாடா ளுமன்றத்திலும் மிக வலுவான ஒரு  எதிர்க்கட்சி அணியை மக்கள் உரு வாக்கி இருக்கிறார்கள் என்பதை யும் பாஜக புரிந்து கொள்ள வேண்டும். 

தமிழக அரசுக்கு வேண்டுகோள் 

தமிழ்நாடு அரசு, தற்போது தொழிலாளர் பிரச்சனை, முறை சாரா தொழிலாளர் பிரச்சனைகள், விவசாயிகள் பிரச்சனை ஆகிய வற்றில் அக்கறை செலுத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும். போக்கு வரத்து தொழிலாளர் பிரச்சனை, ஓய்வு பெற்றவர்களுடைய பஞ்சப் படி பிரச்சனை, மின்வாரிய தொழி லாளர்கள் பிரச்சனை, அங்கன்  வாடி போன்ற திட்டப் பணியாளர கள் பிரச்சனை என்று ஏராளமான பிரச்சனைகள் உள்ளன.

இந்த பிரச்சனைகள் மீதும், பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற  அடிப்படையான பிரச்சனை குறித்  தும் அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இதில் ஏற்பு டைய நடவடிக்கை எடுப்பது மூலம்  கடந்த இரண்டரை ஆண்டுகளாக  காத்திருந்த தொழிலாளர்களுக் கும், மக்களுக்கும் அரசு ஆறுதல்  தர வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள்.

மாட்டு வண்டியில்  மணல் அள்ள...

தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை தென்னை நார் என்பது ஒரு மூலப் பொருளாக இருக்கிறது. தமிழக அரசு இதற் கான ஒரு தொழிற்சாலையை உரு வாக்க முடியும். இங்கு தொழிற்  சாலை அமைப்பதால் பலருக்கு வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைக்கும் என்ற நிலை இருக்கி றது. இதை அரசு செய்ய வேண்டும்.  அதேபோல் இந்த பகுதி தொழில் இல்லாத பகுதியாக உள்ளது. 

சாதாரண மக்களுக்கு, ஒரு அறை மட்டும் கட்டுபவர்கள், வீடு களை மராமத்து செய்பவர்களுக்கு மணல் கிடைப்பது என்பதே பெரும் பிரச்சனையாக உள்ளது. அவர்களுக்கு குறைந்த அளவே மணல் தேவை. இதற்காக மாட்டு  வண்டியில் மணல் அள்ளுபவர் களுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கி, மணல் குவாரி ஏற்படுத்த வேண்டும். மாட்டு வண்டியில் மணல் அள்ளக் கூடாது என்று முழு மையாக தடை செய்வது சரியானது  அல்ல. அதை அரசு செய்யக் கூடாது. 

நலவாரியங்களை முறைப்படுத்துக!

விவசாய வேலை என்பதும் கடுமையாக குறைந்து கொண்டி ருக்கிறது. கிராமங்களில் அந்த வேலை இல்லை. எனவே கிரா மத்தில் விவசாய வேலையை நம்பி  இருந்த மக்கள், வேறு தொழிலை நம்பி நகரத்திற்கு வரவேண்டிய சூழல் உள்ளது. இவ்வாறு வரு பவர்களின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே இருக்கிற கால மாக இது உள்ளது. எனவே அவர்  கள் பிரச்சனையில், நலவாரிய உதவிகள் கிடைப்பது உள்ளிட்ட பிரச்சனையில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். 

நலவாரியத்தில் உள்ள கிட்டத்  தட்ட 74 லட்சம் உறுப்பினர்களு டைய தரவுகள் அழிந்துவிட்டன என்று அரசு கூறுவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இதை  சாதாரணமாக எடுத்துக்கொள் ளக்கூடாது. இதற்கு பொறுப்பா னவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். இதனால் கோரிக்கை  மனு அளித்து விண்ணப்பித்தவர் களுக்கு பலன் கிடைக்கவில்லை. அதேபோல், தான் உறுப்பினரா, இல்லையா என்ற கேள்வியும் தொழிலாளர்கள் தரப்பில் எழுப்பப்படுகிறது. எனவே அரசு உடனடியாக இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பன்னாட்டுக் கம்பெனிகளில்...

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் இருக்கும் பகுதிகளில், சங்க உரி மைக்காக, சங்கம் வைத்ததற்காக பழிவாங்கப்பட்ட தொழிலாளி களை மீண்டும் பணிக்கு கொண்டு வரும் போராட்டங்களை மிகத் தீவிர மாக முன்னெடுத்துக் கொண்டி ருக்கிறது சிஐடியு. 

மாநிலத்தில் உள்ள தொழி லாளர் சட்டங்களை அமல்படுத்த லாம். 8 மணி நேர வேலையை அமல்படுத்தலாம். சங்க உரிமை யை வழங்கலாம். அங்கீகாரம் என்  பதை வழங்கலாம். இதையெல் லாம் மாநில அரசே தலையிடலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.
 

;