தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் நலவாரியப் பதிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். சிஐடியு முறைசாராத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதிஆழ்வார், 15 ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை, காலணி, முதலுதவிப் பெட்டி வழங்கினார். மேலும், நலவாரிய அட்டை பதிவு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆட்டோ சங்க தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.