districts

img

மீனவர் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் சிஐடியு மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர், செப்.9- தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில், மீன்வளம் மற்  றும் மீனவர் நலத்துறை சார்பில்  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தலைமையில், மீன வர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, மீன்வளத்துறை உதவி  இயக்குநர் சிவகுமார், வேளாண் துறை இணை இயக்குநர் ஜஸ்டின்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், சிஐடியு மீன்பிடித் தொழிலா ளர்கள் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் தயார் சுல்தான், நிர்வாகி கள் சம்பைப்பட்டினம் ரசீத்கான், ஜகபர் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.  அப்போது, சிஐடியு மாவட்ட மீனவர்கள் சங்கம் சார்பில், மாவட்ட  ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மனு அளிக்கப்  பட்டது. அதில், கூறியிருப்பதாவது: கடற்கரை கிராமங்களான மல்  லிப்பட்டினம் செம்பருத்தி நகர்,  சேதுபாவாசத்திரம், மீனவர் காலனி, கழுமங்குடா, காரங்குடா, சம்பைப் பட்டினம், செந்தலைவயல், சுப்  பம்மாள்சத்திரம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் உள்ள  தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி துறை முகம் மற்றும் வரத்து வாய்க்கால் களை தூர்வாரிட வேண்டும். மீன்பிடி துறைமுகங்களில் வலைகள் உலர்த்த, மீன்கள் பகிர்  தல், பரிவர்த்தனை பணிகளை செய் திட தளங்களை மேம்படுத்தியும், அகலப்படுத்தியும் தர வேண்டும். சமுதாயக் கூடங்கள் இல்லாத இடங்களில் புதிதாக அமைத்து தர வும், இருக்கும் இடங்களில் செப்ப னிட்டு புதுப்பித்து தரவும் வேண்  டும். செந்தலைவயல் மீன் பிடித்  தளத்தில் மீனவர்கள் பயன்பாட் டிற்கு கட்டப்பட்டுள்ள கட்டடத்தை தனியாருக்கு வாடகைக்கு கொடுப்பதை ரத்து செய்து மீனவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட வேண் டும்.

சுப்பம்மாள் சத்திரம் கடற்கரை  சாலையை நீட்டித்தும் சரி செய்தும் தந்திட வேண்டும். மீன்பிடி சாலை களில் துறைமுகம் வரை மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும். மீனவர் குடியிருப்புகள் சுகா தாரக் கேடின்றி இருந்திட வடிகால், வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும். இணைப்பு சாலைகள் அமைத்து, மின் விளக்கு வசதி களும் ஏற்படுத்தி தர வேண்டும். சுப்பம்மாள்சத்திரம் கிரா மத்தில் மீனவர்கள் பயன்பெறும் வகையில், தனியாக கூட்டுறவு சங்  கம் அமைத்து தர மீன் துறை நிர்வா கம் ஏற்றுக் கொண்ட அடிப்படை யில் உடன் அமைத்து தர வேண்  டும். மீனவக் கிராமங்கள் அனைத் திற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிட வேண் டும். ராவுத்தன்வயல் ஊராட்சி, சம்பைப்பட்டினம் மீனவக்கிராமம் கடற்கரை சாலையை இணைக்கும் வகையில், நீர்நிலையில் பாலம் அமைத்து தர வேண்டும். மீன்களைப் பதப்படுத்த, பாது காக்க, மீனவக் கிராமங்கள் தோறும் குளிரூட்டும் அறைகள் ஏற்படுத்தி தர வேண்டும். குடிமனை இல்லாத மீனவர் களுக்கு குடிமனை வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்  டும். குடிமனை இருந்தும் வீடு இல்  லாத மீனவர்களுக்கு வீடு கட்டி தர  வேண்டும். செந்தலைவயல் கிரா மத்திற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உருவாக்கித் தர வேண்டும். துவக்கப்பள்ளி மற்றும் உயர்  நிலைப் பள்ளிகள் இருக்கும் இடங்  களில் கட்டிட வசதிகள், அடிப்படை வசதிகள் மேம்படுத்திட வேண்டும். தேவையான ஆசிரியர்கள் நிய மித்திட வேண்டும். செந்தலை வயல் உயர்நிலைப் பள்ளியில் சத் துணவு மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் அரசு உதவிகள் வழங் கப்பட வேண்டும்’’.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்  பட்டுள்ளது.

;