தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் இனி ஞாயிற் றுக்கிழமைகளிலும் ஆதார் பதிவு, திருத்தம் மேற்கொள் ளலாம் என்று முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தஞ்சை தலைமை தபால் நிலையத்தின் ஆதார் சேவை மையத்தில் புதிதாக ஆதார் பதிவு செய்தல் மற்றும் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, தொலைபேசி எண் திருத்தம் ஆகிய சேவைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை செய்யப்பட்டு வரு கிறது. இனி, அக்.22 அன்று முதல் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மேற்கண்ட ஆதார் சேவைகள் விரிவுபடுத்தப்பட் டுள்ளன” என தெரிவிக்கப் பட்டுள்ளது.
குறைதீர் கூட்டம்
அரியலூர், அக்.20 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், அக்டோபர் 27 அன்று காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயி கள், முன்னோடி விவசாயி கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.