சேலம், பிப். 13- மேட்டூர் அடுத்துள்ள கொளத்தூரில் தனக்கு முடிவெட்ட மறுத்ததால், காவல்துறையில் புகார் அளிக்க சென்ற தலித் இளைஞரிடம், முடி வெட்ட முடியாது என்றால் விட்டு விட்டு வேறு கடைக்கு செல்ல வேண்டியது தானே என டிஎஸ்பி அறிவுரை கூறிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில், பட்டிய லினத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள முடி திருத்தும் கடைக்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு முடி வெட்டுமாறு கேட்டுள்ளார். இதற்கு முடி வெட்டுபவர் உனக்கு இங்கு முடி வெட்ட முடியாது. நான் உங்களுக்கு முடியை வெட்டினால் மற்றவர்கள் இங்கு முடித்திருத்தம் செய்ய வர மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த இளைஞர், ஏன்னா 30 வருசமா இதையே சொல்லிட்டு இருக்கீங்களே, இது நியாயமா என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த முடித்திருத்துபவர் உங்களுக்கு முடி வெட்ட முடியாது, புகார் வேண்டுமானால் கொடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, இரண்டாவது நாளாக தன்னுடைய குழந்தையை அழைத்துக் கொண்டு அவருக்கு முடிவெட்டுமாறு மீண்டும் அதே கடைக்குச் சென்றபோது தன்னுடைய உழைப்பில் மண்ணள்ளிப் போட வேண்டாம். தயவு செய்து சென்றுவிடுங்கள். உங்களுக்கு முடி வெட்ட முடியாது என கூறியுள்ளார். இதனால் பட்டியல் இன வாலிபர் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரித்த டிஎஸ்பி மரியமுத்து, முடிவெட்ட முடியாது என்றால் விட்டுவிட வேண்டியது தானே. பிரச்சனை உள்ளது என தெரிந்தும் ஏன் அங்கு மீண்டும் மீண்டும் சென்று முடிவெட்ட சொல்கிறீர்கள். ஏதா வது ஒரு காரணத்திற்காக சொல்லி இருக்க லாம். விட்டு விட வேண்டியது தானே என அறிவுரை கூறியுள்ளார்.
வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரி ஒருவரே தலித் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு கொள்ளாமல் அறிவுரை கூறி பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளது. டிஎஸ்பியின் இந்த ஆடியோவுக்கு பல்வேறு தரப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். சட்டத்தை பாது காத்து சமூக நீதி வழங்க வேண்டிய காவல்துறை இதுபோன்ற ஒரு தலைப் பட்சமாக பேசியது கண்டிக்கத் தக்கதாகும் என பலரும் தங்களது கண்ட னத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.