சேலம், டிச. 9- சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் பைத்தூர், வாணா புரம் ,கீழ் தொம்பை ,மேல் தொம்பை பூமரத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றி தழ் கேட்டு பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருப்பு போராட்டத் திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டம் துவங்குவதற்கு முன்பு ஆத் தூர் வட்டாட்சியர், கோட் டாட்சியர் உள்ளிட்டோர் போரட்டம் நடத்தும் இடத் திற்கே வந்து பேச்சு வார்த்தை நடத்தி 15 தினங் களுக்குள் சாதி சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித் தனர்.
இதையடுத்து போராட் டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, இப்போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, தாலுகா செய லாளர் எ.முருகேசன், தாலு காக்குழு உறுப்பினர்கள் எல்.கலைமணி, தர்மலிங்கம், தங்கம்மாள், துரைசாமி, கிளைச் செயலாளர்கள் சுப்ர மணி, ராமசாமி, கருப்பன் ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.