சேலம்,டிச. 11- தலித் மக்களின் பொது வழிப் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட் டதை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், காடையாம் பட்டி தாலுகாவிற்குட்பட்ட பெத்தேல் ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு 1978 ஆம் ஆண்டு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. இத னால், அம்மக்கள் செல்வதற்காக டேனிஸ்பேட்டை செல்லும் பிரதான சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்ட ருக்கு 20 அடி மண் சாலை அரசு தரப்பில் அமைத்துத் தரப்பட்டு, இது நாள் வரை அப்பகுதி மக்கள் பயன்ப டுத்தி வந்தனர்.
இந்நிலையில், சாலையை ஒட்டி விவசாய நில உரிமையாளர்கள் சிலர் சாலைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து தற்போது நடந்து செல்லும் அளவிற்கு சாலை குறு கிவிட்டது. மேலும், இந்த சிறிய சாலை யையும் அப்பகுதி மக்கள் பயன்ப டுத்த முடியாத அளவிற்கு சாலை யின் குறுக்கே கற்களை வைத்து அடைத்தும், மரங்களை நட்டும் விவசாயம் செய்வது போன்ற பல இடையூறுகளை ஏற்படுத்தி வருவ தாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந் தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட் டும், இதுவரை எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என கூறப் படுகிறது. இதனால், ஆவேசமடைந்த அப்ப குதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் சமையல் பாத்திரங் கள் மற்றும் தண்ணீர் குடம், உண வுப் பொருட்களுடன் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு குடியே றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் தங்கள் பிரச்சனையில் தலையிட்டு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொட ரும் என எச்சரிக்கை விடுத்தனர். இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் சமைப்ப தற்கான அனைத்து பொருட்களுடன் திரண்டு வந்ததால் ஆட்சியர் அலுவ லகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, இந்த போராட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஓம லூர் தாலுகா செயலாளர் பி.அரியா கவுண்டர் தலைமை வகித்தார்.
மேலும், சிபிஎம் மாவட்ட செய லாளர் பி.ராமமூர்த்தி, வட்டக்குழு உறுப்பினர் எம்.மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைய டுத்து போராட்டத்தில் ஈடுபட்டோ ருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்மந்தப்பட்ட ஆக்கிரமிப்பை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.