இளம்பிள்ளை, ஜன.13- சங்ககிரி அருகே ஓடும் பேருந்தில் நூதன முறையில் ரூ. 9 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், நரசோதிப்பட்டி, கேஎஸ்இ நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீரமணி (65). அவரது மனைவி ராஜேஸ் வரி (60). இவர்கள் இருவரும், ஈரோடு அருகே உள்ள திண்டல் பகுதியில் வசித்து வரும் தங்களது மகளை சந்திக்க ரூ.9 லட்சம் ரொக்கப் பணத்துடன் ஞாயிறன்று பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், சங்ககிரி புதிய பேருந்து நிறுத்தம் அருகே தம்பதியிடம் இருந்த பணப்பையை பறித்து தப்பி யதாக கூறப்படுகிறது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி காவல் துறையினர், தம்பதியினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.