இளம்பிள்ளை, டிச.1- கனரக வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் பட்டை, இருப்பி டம் கண்டறியும் கருவி (ஜிபிஎஸ்) மற்றும் எப்சி ஸ்டிக்கர் குறிப்பிட்ட நிறுவ னங்களில் மட்டுமே வாங்கி பொருத்த வேண்டும் என போக்குவரத்து ஆணைய ரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி திங்களன்று சங்ககிரி வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் சுப்பிரமணியத்தி டம் திங்களன்று எடப்பாடி மற்றும் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் கூறுகையில், லாரி உரிமையா ளர்கள் கொரோனா காலகட்டத்திலும் மிகவும் சிரமப்பட்டு லாரியை இயக்கி வருகின்றனர்.
இச்சூழலில் ஏற்கனவே 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை செலவு செய்து ஒவ்வொரு வாகனத்திற்கும் கருவிகள் பொருத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களில் மட்டும் கருவிகள் பெற்று பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கருவிகளை விற்கின்ற னர். இதனால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, போக்குவரத்து ஆணையரின் இது போன்ற உத்தரவால் லாரி உரிமையா ளர்களுக்கு கடும் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த உத்தரவினை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.