districts

பூங்கா ஊழியரை தாக்கிய மானை வனப்பகுதியில் விட முடிவு

சேலம், ஜூன் 6- குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா  ஊழியரை தாக்கிக்கொன்ற கடமானை  வனப்பகுதியில் விடுவிக்க வனத்துறை யினர் முடிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில், புள்ளிமான்,  கடமான், முதலை, குரங்கு, வண்ணப் பறவைகள், வெள்ளை மயில் என 200க் கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராம ரிக்கப்பட்டு வருகின்றன. இப்பூங்கா விற்கு சேலம் மற்றும் சுற்றியுள்ள பகுதி யைச் சேர்ந்த மக்களும், ஏற்காட்டிற்கு  வரும் சுற்றுலாப் பயணிகளும் அதிக ளவு வந்து, விலங்குகளை பார்த்துச் செல்கின்றனர். இங்குள்ள வன விலங்குகளை வனத்துறை ஊழி யர்கள் மற்றும் தற்காலிக விலங்கு பாது காவலர்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு கடமான்கள் இருக்கும் கூண்டிற்குள் உணவு வைக்க சென்ற தமிழ்ச்செல்வன் (25), முருகேசன் (45)  சென்றபோது ஒரு கடமான் இருவரை யும் முட்டி தள்ளியது. இதில், தற்காலிக  வன ஊழியர் தமிழ்ச்செல்வன் பரிதாப மாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சேலம் மண்டல வனபாது காவலர் ராகுல், மாவட்ட வன அலுவ லர் காஸ்யப் ஷஷாங் ரவி ஆய்வு  மேற்கொண்டனர். ஆக்ரோஷமாக வன  ஊழியர்களை முட்டி தள்ளிய கடமானை  வன விலங்குகளுக்கான கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து 4 நாட்கள், அதன்  செயல்பாட்டை அறிய கண்காணிப்பில் வைத்திருந்தனர்.

இந்நிலையில், தற்காலிக வன ஊழி யர் தமிழ்ச்செல்வன் உயிரிழப்பிற்கு கார ணமான ஆண் கடமான் மற்றும் பெரிய கொம்புடைய மற்றொரு கடமான் என 2  கடமான்களை காட்டிற்குள் விட வனத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ள னர். இதற்காக சேலம் மண்டல வனத் துறை சார்பில் தமிழ்நாடு தலைமை வன  விலங்குகள் பாதுகாவலர் சீனிவாச ரெட்டிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. தற்போது குரும்பப்பட்டி பூங் காவில் 37 கடமான்கள் உள்ளன.

அவற் றில் 7 கடமான்கள் ஆண். அதில் இருந்து  2 கடமான்களை காட்டிற்குள் விட முடிவு  செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்காலிக வன ஊழியரை முட்டிய கட மானும், மற்றொரு கடமானும் ஆக்ரோ ஷமாக இருக்கிறது. அந்த கடமான்க ளின் கொம்புகள் பெரிய அளவில் இருக் கிறது. அந்த மான்களை தொடர்ந்து பரா மரிப்பதில், சிக்கல்கள் வரக்கூடாது என் பதற்காக அவற்றை அடர்ந்த காட்டிற் குள் விட முடிவு செய்யப்பட்டு, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி முறையாக கிடைக்கப்பெற்றவுடன், 2  கடமான்களையும் காட்டிற்குள் கொண்டு சென்று விடுவோம், என்ற னர்.

;