சேலம், பிப்.28-
வங்கிகள் இணைப்பு மற்றும் பொதுத்துறை வங்கி களை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள கனரா வங்கி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை வகித்தார். வங்கி ஊழியர் சங்கத்தின் குணாலன், மணிகண்டன், உமா நாத், ஸ்ரீதர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.