விழுப்புரம்,டிச.16- ஆணவ படுகொலைகளை தடுக்க வலியுறுத்தி விழுப்புரம், கடலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன், மாவட்டப் பொருளாளர் எஸ்.பார்த்திபன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க கோரி கடலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்மணி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன், செந்தமிழ், சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.