districts

தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: துப்புரவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

சென்னை, ஜன. 29 - பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு ஆய்வாளரை கண்டித்து திங்களன்று (ஜன.29) தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தாம்பரம் மாநகராட்சி, திருநீர்மலை மண்டலம் - 1ன் ஆய்வாளராக இருப்ப வர் ராஜசிம்மன். தூய்மைப் பணியாளர் களை தரக்குறைவாக பேசி கண்ணிய குறைவாக நடத்துவதாகவும், பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் கூறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆய்வா ளர் ராஜசிம்மனை பணியிடை நீக்கம் செய்து,  துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தையடுத்து மாநகராட்சி  நல அலுவலர் அருளானந்தம் நேரடியாக  வந்து, தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர்  சங்கத் தலைவர் கு.ராஜன்மணி, பொதுச்செய லாளர் முருகேசன், உள்ளாட்சி ஊழியர்  சங்கத் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி,  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்  சந்திரன், மூத்த தொழிற்சங்க தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின், ஆய்வாளர் ராஜசிம்மனை பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும், தொழிலாளர்களுக்கு சுழற்சி முறை யில் வாராந்திர விடுப்பு வழங்கப்படும். இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்யப்படும். பெண் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; இயற்கை  உபாதைகள் கழிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். துப்புரவு ஆய்வாளராக பெண் அதிகாரி நியமிக்கப்படுவார். அடிப் படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயர்த்துவது குறித்து அடுத்த பேச்சு வார்த்தையில் முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து, ஆய்வாளர் ராஜசிம்மனை பணியிடை நீக்கம் செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான போராட்டம் தொடரும். தற்போதைக்கு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் படுகிறது என்று தலைவர்கள் அறிவித்தனர்.