districts

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

விழுப்புரம், ஜூன் 11-

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து மடப்பட்டு- திருக்கோவிலூர் பிரதான சாலையில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரோஸ்மா சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோட்டார் சரி செய்யப்பட்டு குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.