districts

img

விக்கிரவாண்டியில் நலத்திட்ட உதவிகள்

விழுப்புரம்,டிச.16- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கக்கனூர் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் டிச. 16 அன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில், அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் பழனி உடனிருந்தார்.  அதனைத்தொடர்ந்து 252 பயனாளிகளுக்கு ரூ.51 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம. ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.