districts

img

அகற்றப்படாத குப்பை கழிவுகள்: பாதிக்கும் கிராம மக்கள்!

வேலூர், ஜூன்.1- வேலூர் மாவட்டம், குடி யாத்தம் நகராட்சியில் 36 வார்டு கள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக மேல்பட்டி சாலை உள்ளி கூட்டுச் சாலை சந்திப்பு குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு மக்கும் குப்பைகள்,  மக்காத குப்பை கள் என தரம் பிரிக்கப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். இதையடுத்து, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டி குப்பம் ஊராட்சி எல்லைப் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது. 7 ஆண்டுகளாக நகராட்சி வார்டுகளில் லாரி மற்றும் ஆட்டோக்கள் மூலம் சேகரித்துக் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இங்குள்ள இயந்திரங்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்டு உரம், மக்கும் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் என பிரிக்கப்படுகிறது. இப்படி பிரிக்கப்படும் குப்பைகளின் இறுதி கழிவுகள் பல வருட காலமாக அகற்றப்படாமல் அங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் செட்டி குப்பம், ராஜ குப்பம், செருவங்கி,  நெல்லூர் பேட்டை கிராமங்க ளில் நிலத்தடி நீர் மாசுபடு கிறது. குடிதண்ணீர் மாசாக மாறி விட்டது. மேலும் நெல், கரும்பு, வாழை, மா, தென்னை, வேர்க்கடலை விவசாயம் பாதித்து வருகிறது. இதுகுறித்து குடியாத்தம் நகராட்சி யில் பலமுறை புகார் அளித்தும் நட வடிக்கை எடுக்கவில்லை. மெத்தனமாக செயல்பட்டு வரும் நகராட்சி நிர்வாகம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செயலாளர்கள் சி.சரவணன், சிலம்பரசன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்  செ. ஏகலைவன், சி.என். ராம்குமார் ஆகியோர் கூறுகையில்,  “குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தவறினால், குப்பைக்கிடங்கை அகற்றும் வரை தொடர் போராட்டம் நடத்த திட்ட மிட்டிருக்கிறோம்” என்றனர்.