மறைந்த கேரள மாநில முன்னாள் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓசூர் மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன் தலைமையில் ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் சேதுமாதவன், சிஐடியு மாவட்டத் தலைவர் வாசுதேவன், கட்டுமான சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.ஜி.மூர்த்தி, செயலாளர் சீனிவாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.