நெல்லைச் சதி வழக்கில் ஆர்.நல்லகண்ணுவுடன் சிறைச்சென்ற எழுத்தாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான மறைந்த தோழர் ஜேக்கப் படத்திற்கு சிபிஐ சார்பில் சென்னை வியாசர்பாடி ஏ.எஸ்.கே நினைவு மன்றத்தில் வியாழனன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, பெரம்பூர் பகுதி செயலாளர் ஆர்.சுப்பிரமணி, லி.உதயகுமார், எம்.வசந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.