கிருஷ்ணகிரி,பிப்.9- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள ஓபேபாளையம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர் குடிசை அமைத்து வாழ்ந்து வரு கின்றனர். சாலை, குடிநீர் வசதியின்றி வசித்து வரும் இந்த மக்கள் தங்க ளுக்கு வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், மின் இணைப்பு வசதியும் கேட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரு கிறார்கள். அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தில் இணைந்த பிறகு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சியுடன் தொடர்ச்சியாக கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் போராட்டம் நடை பெறும் ஒவ்வொரு முறையும் பேச்சு வார்த்தை நடத்தும் சூளகிரி வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளிக்கின்றனர். ஆனால், மேற்கொண்டு எந்த நட வடிக்கை எடுக்கவில்லை. ஓராண்டுக்கு முன்பு ஓபே பாளையம் கிராமத்திற்கு நேரில் வந்த மாவட்ட ஆட்சியரும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் சூளகிரி வட்டாட்சியருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். ஆட்சியரின் உத்தரவு இதுவரை அமலாக்கப்படவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் சூளகிரி ரவுண்டானாவில் பிப்.9 அன்று ஆர்ப்பாட்டம்-காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் குமாரவடி வேல் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ்,பொருளாளர் எம்எம்.ராஜூ, மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி முரளி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பா ளர் சரவணன் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் உடனடியாக களைந்து செல்ல வேண்டும். இல்லை என்றால் கைது செய்வோம் என்று மிரட்டினார். இதற்கிடையே, அங்கு வந்த துணை வட்டாட்சியரிடம் பேசிக்கொண்டிருந்த போது, 25 பெண்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்வ தாக கூறி இழுத்துச் சென்ற காவல்துறையினர் காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். இதனால் சிறிது நேரம் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கண்டனம் காவல்துறையின் இத்தகைய அராஜகத்திற்கு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது.