பொன்னேரி,ஜூலை 14-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவி களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற யார்-யார்? தகுதியானவர்கள் என்ற விதிமுறை களையும் ஏற்கெனவே அரசு அறிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து ரேசன் குடும்ப அட்டை வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொன்னேரியில் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் சுமார் 250 பேருக்கு திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சார்பில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த பயிற்சி கூட்டம் நடை பெற்றது. இதனை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.