districts

img

பழங்குடியின மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருக!

சென்னை, மே 18 -  பழங்குடியின மாணவர்கள் அதி களவில் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பை அரசு உருவாக்கித் தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின்  மாநில துணைத் தலைவர் பெ.சண்முகம் கடிதம் அனுப்பி யுள்ளார். அந்த கடிதத்தில் பெ. சண்முகம் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங் களிலும் பரவலாக பழங்குடியினர் வாழ்ந்து வந்தாலும் குறிப்பாக சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். கல்வித்துறைக்கு அரசு செலுத்திய சிறப்பு கவனம் காரணமாகவும், மாணவர்களுக்கான பல்வேறு உதவிகள் காரணமாகவும் மற்றும் பழங்குடி மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாகவும்  கல்வியின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் அரசு உண்டு - உறைவிட பள்ளிகளில் மட்டும் தேர்வு எழுதிய 1245 மாணவர்களில் 1171 பேர் வெற்றி பெற்றுள்ளனர். எட்டுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன. இதுவல்லாமல், இதர அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் கணக்கில் கொண்டால் அதிகப்படியான மாணவர்கள் உயர்கல்வி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிக ளில் உள்ள பழங்குடி மாணவர் களுக்கான இடங்கள் 1200-தான். அதி லும், பல பாடப்பிரிவுகளில் 50 இடங்களுக்கு மேல் இருந்தால் தான் 1 இடம் பழங்குடியினத்தவருக்கு கிடைக்கும். இதற்கு குறைவாக இடங்கள் உள்ள பாடப்பிரிவுகளில் பழங்குடி மாணவர் சேரவே முடியாது. எனவே, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழக அளவில் பழங்குடியினத்தவருக்குரிய மொத்த இடங்களும் நிரப்பப்படுவதும் அவ சியம். அதற்கு, பழங்குடி மாணவர் களிடமிருந்து அதிக விண்ணப்பங்கள் வரும் கல்லூரிகளுக்கு, போதுமான விண்ணப்பங்கள் வராத கல்லூரி களுக்கான இடங்களையும் அளித்து கூடுதலான எண்ணிக்கையில் பழங்குடி மாணவர்கள் பட்டப் படிப்பு களில் சேருவதற்கான வாய்ப்பினை உருவாக்கித் தரும் வகையில் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, மேற்குறிப் பிட்டுள்ள மாவட்டங்களில் இந்த தேவை அதிகரித்துள்ளது. அத்துடன், பொதுவாக மாணவர் சேர்க்கை இடங் களின் எண்ணிக்கையை அதிகரிக்க வும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

;