districts

2,763 மையங்களில் இன்று டிஎன்பிசி குரூப் -2 தேர்வு

சென்னை,செப்.13- தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர், தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர், ஃபாரஸ்டர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளில் 507 காலியிடங்களும், அதேபோல், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட குரூப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்கள் (மொத்தம் 2,327) நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்.14 ஆம் தேதி நடைபெறுகிறது.