திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கோட்டப்பாறை பகுதியில் உள்ள முட்புதரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய சத்யராஜ் என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து சுமார் 140 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 1400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர்.