திருவள்ளூர் ஜூலை:13,
திருவள்ளூர் மாவட்டம், அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் இவர் ஆடுகளை வளர்த்து இறைச்சிக் காக விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி இவருக்கு சொந்தமான ஆடுகள் அப்பகுதியில் உள்ள மேய்க்கால் நிலத்தில் மேச்சலுக்காக அனுப்பி உள்ளார், மாலையில் மேச்சல் முடிந்து, ஆட்டு மந்தை தொட்டிக்கு திரும்பி வந்த நிலையில் அதில் மூன்று ஆடுகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புகாரின் பேரில் சோழ வரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அங்கு சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சம்பவத்தன்று கார் ஒன்றில் வந்து இறங்கிய ஆறு பேர் கொண்ட மர்ம நபர்கள் மூன்று ஆடுகளை திருடி காரில் ஏற்றி கடத்திச் சென்றது தெரிய வந்தது, இதனை அடுத்து காரின் பதிவு எண்ணை வைத்து, ஆடுகளை திருடி சென்ற திருமழிசை பகுதியைச் சேர்ந்த செல்வி (எ) லட்சுமி(39) அதே பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் (24) மதுரவாயிலை சேர்ந்த சரத்குமார் (28) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரில் வலம் வந்து, ஆடுகளை திருடிச் சென்று கள்ளச் சந்தையில் இறைச்சிக்காக விற்பனை செய்து வந்ததும், இதற்கு செல்வியின் கணவன் அசரா அலி மூளையாக செயல் பட்டுள்ளதும் தெரியவந்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும், காவல்துறையினர் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர், மேலும் தலைமறைவான அசரா அலி உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.