districts

img

திருவண்ணாமலையில் எ.வ.வேலு பிரச்சாரம்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து,  அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை நகரில் பொதுமக்களிடம் வீதி, வீதியாக சென்று வாக்குசேகரித்தார். காந்தி சிலை அருகிலிருந்து,  பெரியத் தெரு, பேகோபுரத் தெரு, திருவூடல் தெரு சந்திப்பு, செங்கம் சாலை, சண்முகா பள்ளி, இரமணாஸ்ரமம் வரை கொளுத்தும் வெயிலிலும் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார்,  வெற்றிச் செல்வன் (காங்கிரஸ்),  சீனி.கார்த்திகேயன்(மதிமுக),  இரா.தங்கராஜ்(சிபிஐ),  ச.நியூட்டன்(விசிக),  நவாப்ஜான்(முஸ்லிம்லீக்), இரா.அருள்(மக்கள்நீதிமய்யம்),  சி.மூர்த்தி(திக) கலிமுல்லா(மமக),  மல்லிவினோத்(தவாக),  கு.ராஜாராம்(யாமஇ),  பி.வாசு(விவசாயிகள்தொழிலாளர்கட்சி),  கிச்சா (தவிஇ) உள்ளிட்ட கூட்டணி இயக்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.