காஞ்சிபுரம், பிப்.28 - காஞ்சிபுரம் ஆட்டோ தொழி லாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை காஞ்சி புரம் மாவட்ட காவல்துறை நிறுத்த வேண்டும் என திருப் பெரும்புதூர் ஆட்டோ சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது. சுங்குவார் சத்திரம் பகுதிக ளில் இயங்கி வரும் தெரசாபுரம் தோழர் வி.பி.சிந்தன் ஸ்டாண்டு, திருவள்ளுவர் ஸ்டாண்டு, மேவலூர் குப்பம் பாரதியார் ஸ்டாண்டு, வல்லம் சத்குரு பரஞ்சோதி பாபா ஸ்டாண்டு, சுங்குவார்சத்திரம் அறிஞர் அண்ணா ‘அ’ மற்றும் ‘ஆ’ ஸ்டாண்டுகள் உள்ளிட்ட பல ஆட்டோ ஸ்டாண்டுகள் காஞ்சி புரம் (சிஐடியு) ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்துடன் இணைக்கப்பட்டது. பேரவைகூட்டத்திற்கு திரு வள்ளுவர் ஸ்டாண்டு தலை வர் டி.பாலாஜி தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்டச் செய லாளர் இ.முத்துக்குமார், ஆட்டோ ஓட்டுநர் மாவட்டச் செய லாளர் பி.ரமேஷ், எம்.தினகரன் (சிஐடியு), திருப்பெரும்புதூர் பொது தொழிலாளர் சங்க துணைத் தலைவர் பா.வடிவேலன், விச மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆனந்த், சிறுபான்மை மக்கள் நல அமைப்புக்குழு மாவட்ட அமைப்பாளர் கே.முகமது கனி, சிஐடியு நிர்வாகிகள் பி.ராஜீவ் காந்தி, ஆர்.சுகந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெட்ரோலியப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஆட்டோ தொழிலாளர் களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களை கடுமையாக ஒடுக்குவதை காவல்துறையினர் கைவிடவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் திருப்பெரும்புதூர் தாலுகா தலைவராக என்.பஷீர்பாய், செயலாளராக டி.பாலாஜி,பொருளாளராக டி.அருள்தாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.