districts

img

பாரம்பரியம் மிக்க கம்யூனிஸ்ட் இயக்கம் தடம் பதித்த திருவண்ணாமலை மாவட்டம்

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகில் காணப்படும் சிறப்பு மிக்க தமிழகத்தின் வரலாற்றுப் பதிவுகளில் முக்கியமான நகரம் திருவண்ணாமலை நகரமாகும்”. 1805 வேலூர் சிப்பாய் கலகம் என்று வரலாற்றுப் பதிவுகள் தவறாக பதியப்பட்ட மகத்தான வேலூர் கோட்டையில் சிப்பாய்கள் நடத்திய முதல் சுதந்திர போராட்டம் நடத்திய ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம்  பிரிந்தது. இந்தியாவை யார் கைப்பற்றுவது என்பதில் ஆங்கிலேய மற்றும் பிரஞ்சு ஆதிக்கக்காரர்களிடையே 1760 ஜனவரி 22ஆம் தேதி வந்த வாசி நகரத்தில் நடந்த போரில் ஆங்கி லேயர்க ளுக்கு வெற்றியை தேடித் தந்து,  200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்ய  பாதை வகுத்த வந்தவாசி போரும் இதே மண்ணில் தான் நடைபெற்றது. சுதந்திர போராட்டத்தில் திருவண்ணா மலை மாவட்டத்தில் அனைத்து சமூகத்தின ரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்ட த்தில் ஈடுபட்டனர் குறிப்பாக அப்துல் ஜப்பார் மகன் அப்துல் கபார் 18 மாத காலம் பெல்லாரி, அலிப்புரம் சிறைச் சாலைகளில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். அப்துல் ஷரிப், ஆரணியில் மகாலிங்கம் ஆச்சாரி, சீனிவாஸ் ஆச்சாரி, கே. ஆறுமுகம், கிருஷ்ணசாமி ஆச்சாரி, செங்கம் தாலுகாவில் அருணாச்சல சிவ, போளூரில் குழந்தைவேலு, செய்யாறில் எத்திராஜ் முதலியார், வந்த வாசி குழந்தைவலு முதலியார், வென் குன்றத்தில் என். சின்னசாமி முதலியார், தேசூர் ராஜகோபால் நாயுடு என எண்ணற்ற வர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் திகழ்கிறது.

சிறை சென்ற போராட்ட வீரர்கள் சீரிய சிந்தனை ஊக்கத்தால் கம்யூனிஸ்டாக மாறினர். டி .ஆர்.கோபாலன், கே.ஆர்.சுந்தரம், செங்கம் ராமசாமி, திருவண்ணாமலை என்.பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ண ஆச்சாரி, வேலு உள்ளிட்டோர்  புடம்போட்ட கம்யூனிஸ்டுகளாக மாறினர். வட ஆற்காடு மாவட்டத்தின் முதல் கம்யூனிஸ்ட் என்ற பெருமைக்குரிய மார்க்சிய அறிஞர் கே. ஆர். ஜமத்கனி ஒன்றுபட்ட மாவட்டமான வாலாஜா பகுதி யில் பிறந்தவர்.  1942 முதல் 47 வரை சிறையில் இருந்தபோது மார்க்சின் மூலதன நூலை தமிழில் முதன் முதலாக மொழி பெயர்த்தவர்.  வேலூரில் டி.ஆர்.கோபாலன் செயலாளராகவும், கே. ஆர்.சுந்தரம், வி. எஸ் கிருஷ்ணன், ஜி.வி. துரைசாமி, சிவானந்தம், வி.எஸ். ஸ்ரீராமன், வி.வி. சுந்தரம், மாணிக்கம் ஆகிய 7 பேரை கொண்டு  வேலூரில் முதலில் கட்சிக்கிளை அமைக்கப்பட்டது. திருவண்ணாமலையில் டி.கே. சண்முகம், டி.என். குப்புசாமி ஜெகநாதன், ஸ்ரீராமுலு, வெங்கட்ராமன் ஆகியோரை கொண்டு முதல் கட்சிக் கிளை அமைக்கப்பட்டது. 1940 வேலூர் சிறை யிலிருந்து பரோலில் விடுதலையானார் தோழர் எம். ஆர். வெங்கட்ராமன். மீண்டும் சிறைக்குச் செல்லாமல் தலைமறைவாக செயல்படவண்டும் என்று கட்சி கட்டளை இட்டது. அந்தக் கட்டளையை ஏற்று, திரு வண்ணாமலையில் தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் தலைமறைவாக இருந்து, திருவண்ணாமலை டி.என். கிருஷ்ணசாமி உடன் இணைந்து, இரவு நேரத்திலும் சமார் 20 மைல் தூரம் சைக்கிளில் சென்று கட்சிப் பணியாற்றினார்.

தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன்,  அண்ணாமலையார் கோயிலில் சாமி சிலை தூக்கும் தொழிலாளர்களுடன் பேசி 4 அணா இருந்த கூலியை ரூ.5 ஆக உயர்த்தக்கோரி 20 தொழிலளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். பேச்சு வார்த்தைக்கு பின்பு ரூபாய் 1 கூலியாக உயர்த்தப்பட்டது. தோழர் எம்.ஆர்.வி வழிகாட்டியதன் காரணமாக போராட்டம் வெற்றி பெற்றது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரங்க சாமி ரெட்டியாரும், கம்யூனிஸ்ட் தலைவர் டி.என். கிருஷ்ணசாமியும்,  1952ஆம் ஆண்டில் வேலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திருவண்ணாமலையில் அருகி லுள்ள சாத்தனூரில் அணை கட்ட வேண்டும் என்று மனு கொடுத்தனர். அதே ஆண்டில் திருவண்ணாமலையில் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சாத்தனூர் அணை கட்ட வேண்டும் என்று திருவண்ணாமலை  கோரிக்கை மாநாட்டை நடத்தியுள்ளனர். 1956ஆம் ஆண்டு தமிழக அரசு  2 கோடியில் அணைக்கட்ட திட்டம் உரு வாக்கப்பட்டது. 1959 ல் அணைகட்டி முடிக்கப்பட்டது. இன்று திருவண்ணாமலை நகருக்கு குடிநீரும், மாவட்டத்தில்   சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசாய சாகுபடி பாசனம் கிடைத்துள்ளது  என்றால், அதன் பின்னணியில் கம்யூனிஸ்ட்களின் உழைப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.வீரபத்திரன்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்

;