districts

img

காட்டுநாயக்கன் மக்கள் கோரிக்கை ஏற்பு மலைவாழ் மக்கள் சங்க போராட்டம் வெற்றி

திருவண்ணாமலை, டிச. 14- திருவண்ணாமலை மாவ ட்டத்தில் வந்தவாசி வட்டம் கீழ் குவளைவேடு, செய்யாறு வட்டம் கொடநகர், சேத்துப்பட்டு வட்டம் மரக்குணம், பெரிய கொழப்பலூர், வெம்பாக்கம் வட்டம் அரியூர், பெருங்கட்டூர், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் காட்டுநாயக்கன் பழங்குடி மக்களுக்கு சாதி சான்று, வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள் கேட்டு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்க மாநிலத் தலைவர் எ.அய்ய னார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க  திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர்  எம்.மாரி முத்து  முன்னிலை வகித்தார். காட்டு நாயக்கன் சங்க மாநில பொருளாளர் தயாளன்,காட்டுநாயக்கன் சங்க நிர்வாகிகள், திருவண்ணா மலை மாவட்ட தலைவர். ஆனந்தன்,செயலாளர் சுரேஷ்,பொருளாளர் ஏழுமலை. வேலூர் மாவட்டத் தலைவர் முருகன்,செயலாளர் பாஸ்கர், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் வெங்கடேசன்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்க திரு வண்ணாமலை தலைவர் ராதா கிருஷ்ணன்,மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள்  டி.வெங்க டேசன், செய்யாறு வட்டச் செய லாளர், அப்துல் காதர் வந்தவாசி வட்டச் செயலாளர், மலைசங்க நிர்வாகிகள் ரேணுகா, விஜயா, ராமதாஸ், மோகன் செயலாளர் கீழ்கொவளைவேடு ஆகியோர் கலந்துகொண்டனர். போராட்ட களத்திற்கு வந்த செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ்,“ நிலுவையில் உள்ள மனுவை விசாரித்து 15 நாட்களுக்குள் காட்டுநாயக்கன் சாதிச் சான்று வழங்கப்படும்” என்றார். செய்யாறு பகுதியில் எந்தெந்த கிராமங்களில் காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள் என்பதை கணக்கெடுத்து மானிடவியல் ஆய்வின் மூலம் சாதிச்சான்று வழங்கப்படும் என்றும் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்கப்படும் என்றும் உறுயளித்தார். கோட்டாட்சியர் உறுதியளித்தின் பேரில் போராட்டத்தை தற்காலி கமாக நிறுத்தி வைப்பதாகவும், கோட்டாட்சியர்  குறிப்பிட்ட காலத்தில் கோரிக்கைகள் நிறை வேற்றாவிட்டால் ஆயிரக்கணக்கான மக்களோடு மாபெரும் போராட்டம் நடைபெறும் என  மலைவாழ் மக்கள் சங்க  மாநில பொதுச் செய லாளர் இரா.சரவணன் கூறினார்.