districts

காவல்துறையினர் குடியிருப்பில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

ராயபுரம்,ஜூலை 27-  

     புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள காவல்துறையினர் குடியிருப்பை சுற்றி சுமார் 7 அடி உயரத்தில் சுவர்  அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் குடியிருப்பு அருகே கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக போலீஸ்  குடியிருப்பு சுற்றுச்சுவர் அருகே நீண்ட தூரத்துக்கு பள்ளம்  தோண்டப்பட்டுள்ளது. வியாழனன்று தொழிலாளர்கள் சிலர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்பகுதியில் மேலும் பள்ளம்  தோண்டினர். அப்போது 100அடி தூரம் வரை  சுற்றுச்சுவர் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. மேலும் கால்வாய் அமைக்கும் பணியில் அதிக அளவிலான தொழிலாளர்கள் ஈடுபடாததாலும், சுற்றுச்சுவர் அருகே பணியாளர்கள் யாரும் இல்லாததாலும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. தொடர்ந்து அங்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.