districts

img

புதிய வசதியை அறிமுகம் செய்தது டிடிஎச் சேவை வழங்கும் டிஷ் டிவி

சென்னை, ஏப்.30- டி2ஹெச் சேவை வழங் கும் டிஷ் டிவி நிறுவனம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் புதிய ஸ்ட்ரீமிங் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.  அதாவது டிஷ் டிவி ஸ்மார்ட் என்ற பெயரில் இந்த  ஸ்ட்ரீமிங் சேவை வழங்கப்படுகிறது. அதாவது வழங்கமான  தொலைக்காட்சி பார்க்கும் வசதி மற்றும் ஒடிடி தளங்களின் ஸ்ட்ரீமிங் இரண்டையும் ஒரே நேரத்தில், ஒரே ரீசார்ஜில் பார்க்க முடியும் என டிஷ் டிவியின் முதன்மை செயல் அதிகாரி மனோஜ் டோபல் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சேவையை ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும் என்றார்.  புதிய திட்டத்தில் ஒரு மாதத்துக்கு ரூ.250 முதல் ரீசார்ஜ் செய்து எங்களின் சேவைகளை பெற முடியும். அதேபோல் புதிய வாடிக்கையாளர்கள் டிஷ் டிவியின் செட்அப் பாக்ஸ் இணைப்பை பெறுவதற்கு ரூ.3,000 செலுத்த  வேண்டியிருக்கும். இந்த தொகையை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.5,500 மதிப்புக்கு கேஷ்பேக் வழங்கப்படும் என்று, இதை வைத்து ஒவ்வொரு மாதமும்  ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.