districts

img

ஊராட்சி காந்தி நகரில்  60 ஆண்டுகளாக  வீடு கட்டி வசித்து வந்த குறவன் பழங்குடி இன காந்தா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், பாவக்கல் ஊராட்சி காந்தி நகரில்  60 ஆண்டுகளாக  வீடு கட்டி வசித்து வந்த குறவன் பழங்குடி இன காந்தா -சங்கர் வீட்டை இடித்த ஆதிக்க சாதி வெறி பிடித்த குணசேகரன், ஞானசேகரன் கும்பல்  மீது காலம்தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டம்  நடத்தியது.  இதன் பகுதியாக மாநில குழு உறுப்பினர் டில்லிபாபு தலைமையில் மாபெரும் கண்ட போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன்,செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி,வட்டச் செயலாளர் மகாலிங்கம்,தமிழ்நாடு குறவன் பழங்குடி முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.சண்முகம், மாநில தலைவர் வி.கே.தணிகாசலம், குறவன் பழங்குடி மக்கள் சங்க மாநில பொருளாளர் வேலு,வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் அண்ணாமலை  ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட, வட்ட குழு உறுப்பினர்கள் லெனின் முருகன், எத்திராஜ்,சேகர் பாஞ்சாலராசன், செல்வராஜ்,நாகராஜ், ராஜா  ஆகியோர் கலந்து கொண்டனர்.