விழுப்புரம்,டிச.6- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வெள்ளையாம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் சீனிவாசனுக்கு சிவா, மணி கண்டன், ரவி, சுரேஷ், சக்தி, சரசு ஆகிய எனது பிள்ளைகள் வெள்ளையாம்பட்டு மற்றும் பனமலைப்பேட்டை அரசு பள்ளி யில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அலுவலகம் சாதி சான்றிதழ் வாங்கி வந்தால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரி வித்துள்ளார்கள். இதனால் என்ன செய்வ தென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். மேலும் பல ஆண்டுகளாக மலைக்குறவர் (பழங்குடியினர்) மக்களுக்கு சாதிசான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு மனு கொடுத்தும், எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியருக்கு மலைக்குறவர்கள் (பழங்குடியினர்) குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும், அவரது பிள்ளைகளுக்கும் எதிர்கால நலனை கருதி சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தோம், அதன்பேரில், வட்டாட்சி யர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர்கள் நேரடி விசாரணை செய்தனர். அதன்பிறகும் அந்த மனுவின்மீது இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆகையால் மாவட்ட ஆட்சியர் மலை க்குறவர் (பழங்குடியினர்) குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை நலனைக்கருதி சாதிசான்றிதழ் வழங்க சம்மந்தப்பட்ட துறைக்கு அறிவுருத்தி நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டு கொண்டு உள்ளனர்.