districts

img

பாலாற்றில் உயர்மட்ட பாலம் கிராம மக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு, டிச. 3- பாலாற்றில் ஈசூர் வள்ளிபுரம் இடை யேயான தரைப்பாலம் சமீபத்தில் பெய்த கன மழையால் சேதமடைந்துள்ள தரைப்பாலத் ்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்க கிராம மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கனமழை பெய்ததால், பாலாற்றில் 90 ஆண்டுகளுக்கு பிறகு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இதனால் பாலாற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதில் குறிப்பாக திருக்கழுக்குன்றம் அடுத்த ஈசூர் வள்ளிபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் முழுவதும் சேதமடைந்தது. கருங்குழி திருக்கழுக்குன்றம் இடையேயான போக்கு வரத்து தடைபட்டதால், ஈசூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் படாளம், செங்கல்பட்டு வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் நிலை உள்ளது. அதேபோல், மதுராந்தகம் மற்றும்  கருங்குழி செல்லவும் 35 கி.மீ. சுற்றி செல்லும் நிலை உள்ளதால், 30க்கும் மேற்பட்ட  கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் ்பட்டுள்ளது. இதுகுறித்து ஈசூர் வள்ளிபுரம் கிராம மக்கள் கூறுகையில்,“ தரைப்பாலம் சேத மடைந்ததால் மேற்கண்ட வழித்தடத்தில் முறையான பேருந்து சேவைகள் இல்லா ததால் படாளம் செல்வதற்கு கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தரைப்பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

;