districts

தனியார் மருத்துவமனை வசூலித்த பணத்தை அரசு உடனே வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளிடம் 

புதுச்சேரி, ஜூன் 11- அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்  கல்லூரியில் புதுச்சேரி அரசால் அனு மதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் வசூலித்த கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் 2ஆம் அலையை சமாளிக்க புதுச்சேரியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் புதுச்சேரி அரசு முழு கட்டுப்பாட்டுக்குள் கடந்த மாதம் கொண்டு வந்தது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளி களிடம் எந்தவிதமான கட்டணங்களும் வசூ லிக்கக் கூடாது என புதுச்சேரி அரசு உத்தர விட்டிருந்தது. இந்நிலையில் அரியூரில் உள்ள  தனியார்வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு சார்பில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் கட்டா யப்படுத்தி மருந்துகள் வாங்குவதற்கும், ஈசிஜி, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பரி சோதனைகள் செய்யவும் பணம் வசூலிப்ப தாக புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் சுகா தாரத்துறைக்கு கடந்த மே 4ஆம் தேதி புகார்  தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு சார்பில் தனியார் மருத்துவ  கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்ட நோயாளிகளிடம் கட்டாயப்படுத்தி வசூ லிக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து சென்னை  உயர்நீதிமன்றத்தில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் ஆனந்த் பொது நலவழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு வெள்ளியன்று  (ஜூன் 11) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள் ளது. அதன்படி அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அரசால் அனு மதிக்கப்பட்ட  நோயாளிகளிடம் வசூலிக்கப் பட்ட கட்டணத்தை புதுச்சேரி அரசு 8 வாரத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்று  தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு உத்தரவின் அடிப்  படையில் புதுச்சேரியில் உள்ள மற்ற தனி யார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களில் அரசு சார்பில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டி ருந்தால், அவர்களும் புதுச்சேரி அரசின் சுகா தாரத்துறையை அணுகி கட்டணத்தை திரும்பப் பெற முடியும். வாலிபர் சங்கம் புதுச்சேரி அரசும்,  சுகாதாரத் துறையும் உட னடியாக, அரசு சார்பில் தனியார் மருத்துவ  கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்  காக அனுப்பப்பட்ட கொரோனா நோயாளி களிடம் இருந்து கட்டணம் வசூல் செய்தது சம்பந்தமான புகார்களை பெறுவதற்கு உரிய அதிகாரிகளை நியமித்து புகார்களை பெறவேண்டும் என்று வாலிபர் சங்க பிர தேச தலைவர் ஆனந்த், செயலாளர் சரவ ணன் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அரியூர் வெங்கடேஸ்வரா மருத்  துவ கல்லூரியில் சிகிச்சை பெற்ற கொரோனா  நோயாளிகள் மருத்துவமனை சிகிச்சைக்காக  செலவு செய்த மருந்து சீட்டுகள், பரிசோதனை  ரசீதுகள் ஆகியவற்றை கொடுத்து தாங்கள் செலுத்திய கட்டணத்தை அரசிடம்  திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த கட்டணத்தை திரும்ப பெற உதவுவ தற்காக வழக்கு தொடர்ந்த இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகளை தொடர்பு கொள்வதற்கு  செல்பேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது: 9500367011, 9047388111.
 

;