சென்னை, டிச. 11 - சென்னை மாநக ராட்சி பகுதியில் சனிக் கிழமையன்று (டிச.11) 1600 இடங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 14வது மெகா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தி யாளர்களிடம் அவர் கூறி யதாவது: சென்னை மாநகராட்சி யில் 78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்ற னர். இவர்களில் 85 விழுக்காட்டினர் முதல் தவணை தடுப்பூசியும், 60 விழுக்காட்டினர் இரண்டா வது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். 50 நாடுகளில் ஓமைக்கிரான் பரவியுள்ள சூழலில், தமிழக மக்கள் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும். ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்த 9 ஆயிரத்து 819 நபர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 11 நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமைக்ரான் பாதிப்பில்லாத நாடுகளிலிருந்து வந்த 43 ஆயிரத்து 938 நபர்க ளில் 1303 பேரிடம் உத்தேச பரிசோதனை செய்யப்ப பட்டது. இதில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை பரிசோ தித்ததில் இதுவரை 18 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட ஆய்வில் அனை வருக்கும் டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இவற்றினை முழுமையாக உறுதி செய்ய, இவர்களின் மாதிரிகள் பெங்களூரில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி னார்.