districts

ஸ்மார்ட் போனின் பொருளாதார மதிப்பு குறித்த ஆய்வு

சென்னை, ஜூலை 6–

     தொலைதூரத்தில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்வதில் இருந்து வீட்டில் இருந்தே நாம் பயன்படுத்தும்  மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட அனைத்திலும் ஸ்மார்ட்போனின் பங்கு மிகுந்த முக்கியத்து வம் பெற்றுள்ளது.

    இந்த நிலையில் விவோ இந்தியா நிறுவனம், தனது இந்தியாவின் தாக்க அறிக்கை 2022–ன் 2வது பதிப்பில் ‘ஸ்மார்ட்போனின் பொருளாதார மதிப்பு’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டது.   டெக்சார்க் அமைப்புடன் இணைந்து  நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் காரணமாக கட்டணங்கள் செலுத்துவது முதல் டிக்கெட் முன்  பதிவு செய்வது வரை, மளிகை பொருட்கள் வாங்குவது  முதல் பிற பொருட்களை வாங்குவது வரை அனைத்திலும்  பயனாளிகள் பயனடைந்து வருவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து  விவோ இந்தியா நிறுவனத்தின்  வர்த்தக ஆலோ சனைப் பிரிவு தலைவர் கீதாஜ் சன்னானா கூறுகையில், இணைய இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் நாட்டின்  சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஊக்க சக்தியாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.