districts

சிட்கோ மனைகளின் விலை 75 விழுக்காடு குறைப்பு: முதல்வருக்கு டாக்ட் சங்கம் நன்றி

சென்னை, டிச. 8- சிறு,  குறுந்தொழில்கள் நலனை கருத்தில் கொண்டு சிட்கோ தொழிற் மனைகளின் விலை 75 விழுக்காடு குறைத்து அரசாணை வெளியிட்ட  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்ட் சங்கம் நன்றி தெரிவித்து ள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் நீண்டநாள் கோரிக்கையான தொழிற்பேட்டைகளில் குறுந்தொழில் துறைசார்ந்த தொழில் முனைவோர் சிட்கோ நிர்ணயித்து உள்ள அதிகப்படி விலையால் எங்களால் தொழில் நடத்த மனை வாங்க இயலவில்லை. ஆதலால் சிட்கோ நிர்ணயித்த நிலத்தின் விலையை குறைக்க வேண்டும் என்ற டாக்ட் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, இயற்கை சீற்றத்தில் இருந்தும், கடந்த பல்லாண்டு காலமாக தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பையும், கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழில் முடக்கத்தில் இருந்து தொழிற்முனைவோர் மீள வழிவகை செய்யும் பொருட்டு தற்போது தொழில் மனைகளின் விலையை குறைந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் குடியிருப்பு பகுதிகளில், தொழிற்பேட்டையில், குறுந்தொழில் நிறுவனங்கள் (மைக்ரோ செக்டார்) நடத்தும் லட்சக்கணக்கான கைத்தொழில்,    குறுந்தொழில் நிறுவ னங்கள் சார்பில் முதலமை ச்சருக்கும், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் ஊரக தொழில்துறை அமைச்சர் மற்றும் அரசு செயலாளர், சிட்கோ நிர்வாக இயக்குநர், தொழில் வணிக துறை இயக்குநர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;