districts

img

சிபிஎம் வேலூர் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது

வேலூர் டிச 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட 23 ஆவது மாநாடு சனிக்கிழமையன்று (டிச.11) காட்பாடியில் தொடங்கியது. குடியாத்தம் நகரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கொடியை செயற்குழு உறுப்பினர் எஸ். டி. சங்கரி  பெற்றுக் கொண்டார். திருப்பத்தூரிலிருந்து வரப்பெற்ற தோழர் கே.வரத ராஜன்  நினைவு சுடரை செயற்குழு உறுப்பினர் பி.காத்தவராயனும், ராணிப்பேட்டையில் இருந்து வரப்பெற்ற தோழர் தே. லட்சுமணன் நினைவு சுடரை செயற்குழு உறுப்பினர் செ.ஏகலைவனும் பெற்றுக் கொண்டனர்.

மூத்த உறுப்பினர்கள் கவுரவிப்பு

மாநாட்டு செங்கொடியை கட்சியின் மூத்த உறுப்பி னர் கே சி. தெய்வசிகாமணி ஏற்றினார். நவயுகா கலைக்குழு குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய பொது மாநாட்டில் 70 வயதை கடந்த 30க்கும் மேற்பட்ட மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். பொதுமாநாட்டை தொடங்கி வைத்து கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் பேசினார். சுசேதனா சட்டோ பாத்யாய எழுதிய ‘தொடக்க கால கம்யூனிஸ்ட் முசாபர் அகமது’ புத்தகத்தை மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் வெளியிட, வழக்கறிஞர் சு.சம்பத்குமார் பெற்றுக் கொண்டார். புத்தகத்தை மொழி பெயர்த்த  ஆதிவராகனை மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராஜன் கவுரவித்தார்.

;