தரமணி பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் மக்கள் பால், உணவு பொருட்கள் கிடைக்காமல் திண்டாடினர்.
தரமணி எம்ஜிஆர் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
சென்னை காரப்பாக்கத்தில் நடிகர் விஷ்ணுவிஷால் இல்லத்திற்கு வருகை தந்த பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமீர்கானை மீட்புக் குழுவினர் படகு மூலம் மீட்டனர்.
ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
மதுரவாயல் பகுதி ஶ்ரீ லட்சுமி நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை சார்பில் உணவு வழங்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மதுராந்தகம் எரியிலிருந்து செல்லும் கிளியற்றில் குழந்தைகளுடன் பெற்றோர் ஆபத்தான நிலையில் விளையாடி வருகின்றனர்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் இந்திய கடற்படையினர் வெள்ளத்தில் சிக்கிய வீடுகளி லிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டனர்.
புதுகும்மிடிப்பூண்டி குடியிருப்பு பகுதியை வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மிக்ஜம் புயல் மழையால் ராயபுரம் ராம்தாஸ் நகரில் மரம் வேரோடு சாய்ந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மடிப்பாக்கம் மற்றும் கொளத்தூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை வீடுகளிலிருந்து இந்திய கடற்படையினர் படகு மூலம் மீட்டனர்.
மிக்ஜம் புயல் மழையால் ராயபுரம் 59வது வட்டம் ராம்தாஸ் நகரில் வெள்ளம் வடியாமல் உள்ளது.
தரமணி100 அடி சாலையில் 2ஆவது நாளாக வெள்ளம் வடியாததால் சிரமப்படும் வாகன ஓட்டிகள்.
பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மீனவ கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சிந்தாதரிப்பேட்டை பம்பிங் ஸ்டேசன் பகுதியில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தை வெளியேற்றவும், உணவும் கேட்டு மறியலில் ஈடுபட்டனர்
மிக்ஜம் புயலால் சென்னை புலியந்தோப்பு பகுதியில் சாலைகளில் வெள்ளம் வடியாததால் வீடுகளில் உள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். பல இடங்களில் வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
திருத்தணி வட்டம் வீரகநல்லூர் ஊராட்சி பகத்சிங் நகர் இருளர் காலனி புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெஎம்ஜெ சமூக சேவை சங்கம் சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கபட்டது. தொண்டு நிறுவன தலைவர் அருட் சகோதரி லிஸ்னமேரி இதனை வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் அந்தோணி, வட்டக்குழு உறுப்பினர்கள் பாலாஜி, ஜெயவேல் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.