districts

சென்னை முக்கிய செய்திகள்

சிறுவனை கொன்று உடலை கிணற்றில் வீசிய கொடூரம்

சிதம்பரம், டிச.4 - கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே சிறு வனை கொலை செய்து   கல்லைக்கட்டி கிணற்றில் வீசப்பட்டுள்ளது குறித்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள  பேரூர் கிராமத்தைச் சேர்ந் தவர் இளையபெருமாள். இவரது மகன் கோகுல கிருஷ்ணன் (17). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் உள்ளார். இந்த நிலையில் சனிக் கிழமை காலை வீட்டை விட்டு  வெளியில் சென்ற கோகுல கிருஷ்ணன் இரவு வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை இளையபெருமாள் ஞாயிறன்று சோழத்தரம் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து தேடி வந்த னர். இந்த நிலையில் பேரூர் அருகே உள்ள குறிஞ்சி  குடி கிராமத்தில் உள்ள பாஸ்கர் என்பவரது  கிணற் றுக்கு அருகே கோகுல கிருஷ்ணனின் செல்போன் கிடந்துள்ளது. இதனை கைப் பற்றி போலீஸார் விசாரணை  செய்த போது  கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில்  கோகுலகிருஷ்ணன் உடல்  கல்லை கட்டி போட்டிருப்ப தும் தெரிய வந்தது. காவல் துறையினர் உடலை கைப் பற்றி உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்டம்  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். தனிப்படை அமைத்து  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கவிதை நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை, டிச.4 - புதுக்கோட்டை பச்சை பூமி அமைப்பின் தலைவர் கவிஞர்  வேங்கை ஆரோனின் 10 கவிதை  நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற் றுக்கிழமை புதுக்்கோட்டையில் நடைபெற்றது.  விழாவுக்கு திருச்சி தனிநா யகம் அடிகள் ஆய்வு நிறுவன  இயக்குநர் அமுதன் அடிகள் தலைமை வகித்தார். வீணைக்கு வெட்கம், எள்ளு வயல் பூக்களே,  மணம் கமழும் திருமறைகள்  ஆகிய நூல்களை அழகப்பா  பல்கலைக்கழக உயிரி தகவலி யல் துறைத் தலைவர் ஜெய காந்தன் வெளியிட்டார். காதல் முதலீடு, நேரம் நம் கையில், ஆலி, வேங்கை ஆரோ னின் கவிதைகள் ஆகிய நூல்களை  கவிஞர் தங்கம் மூர்த்தி வெளி யிட்டார். இரவின் கதறல், ஒரு  புயலின் நாதம், உறைந்த கனவு கள் ஆகிய நூல்களை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர்- கலைஞர்கள் சங்கத்தின்  மாநிலத் துணைத் தலைவர் கவிஞர்  நா.முத்துநிலவன் வெளியிட்டார். முன்னாள் சட்டப்பேரவை கவிச்சுடர் கவிதைப்பித்தன் சிறப்பு ரையாற்றினார். நூலாசிரியர் கவிஞர் வேங்கை ஆரோன் ஏற்பு ரையாற்றினார்.

சத்து மாத்திரைகளை அதிகமாக  சாப்பிட்ட மாணவர் உயிரிழப்பு

திருச்சிராப்பள்ளி, டிச.4 - திருச்சி திருவளர்ச்சிபட்டி செம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் காமராஜ். இவரது மகன் வில்பட் (14)  திருச்சி புத்தூரில் உள்ள ஒரு தனி யார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் பள்ளியில் அரசாங்கம் கொடுக்கும் சத்து மாத்திரையை ஆசி ரியர்கள் கொடுத்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் 30  மாத்திரைகள் கொடுக்கப்பட்டது. ஆனால் மாணவரோ கடந்த  ஒன்றாம் தேதி பள்ளியில் இருக்கும் ்போது பத்து மாத்திரையை சாப்பிட்ட தாக கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய அந்த  மாணவனுக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே  பெற்றோர் மகனை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்க ளன்று மாணவர் வில்பட் உயிரிழந்தார்.  இது தொடர்பாக உறையூர் காவல் துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிரட்டலை துணிச்சலோடு எதிர்கொள்வோம்! அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை, டிச.4 - எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல், துணிச்சலோடு எதிர்கொள்வோம் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.  புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “அமலாக்கத் துறை அலுவலர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து கேட்கிறீர்கள். யார் தவறு செய்தாலும், அதுகுறித்து ஆதாரப்பூர்வமாக தகவல் கிடைத்தால், அவர்கள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது நேர்மையாக துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த மிரட்டலுக்கும் அஞ்சுவதோ, பணிவதோ திமுக இயக்கமல்ல. எல்லாவற்றையும் துணிச்சலுடன் எதிர்கொள்வோம். அமலாக்கத்துறை அலுவலகம் சோதனை செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்கள் எந்தத் தவறும் செய்யாவிட்டால், ஏன் மத்திய காவல் படையினரை வைத்து அறைகளைப் பாதுகாக்க வேண்டும். மடியில் கனமில்லையென்றால் வழியில் என்ன பயம். பாஜகவுக்கு அமலாக்கத் துறைதான் கூட்டணிக் கட்சி என்பதைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், வரும் மக்களவைத் தேர்தலை இந்தியா கூட்டணி உற்சாகத்துடன் எதிர்கொள்ளும்” என்றார்.