districts

img

ஆபாசமாக பேசிய வேளாண்மை உதவி இயக்குநர் பெரணமல்லூரில் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை,ஜூலை 12-

     பெரணமல்லூரில் ஆபாசமாக பேசிய வேளாண்மை உதவி இயக்குநரை கண்டித்து விவ சாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உதவி இயக்கு நராக பணிபுரிந்து வரும் கோவிந்தராஜன், அலுவலகத்துக்கு வரும் விவசாயிகளை அவ மரியாதையாக நடத்து கிறார். மேலும், விவசாயி களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் முறையாக தெரி விப்பது இல்லை. வெளிப் படைத் தன்மையின்றி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதர வாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டத்தை அறிவித்தது.

    இதனையடுத்து, திருவண்ணாமலை இணை இயக்குநர் அலுவல கத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. துவக்கத்தி லேயே அங்கிருந்து வெளி யேறிய கோவிந்தராஜன் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பலராமனை ஆபாசமாக திட்டினார். அவரது போக்கை கண்டித்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேளாண் அலுவ லகம் முன்பு ஜூலை 12 அன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் காத்திருப்புப் போராட்டமாக மாறி அலுவலகத்திலேயே கஞ்சி காய்ச்சினர்.  

    இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் கே. பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ந. பிரபாகரன், சேத்துப்பட்டு வட்டார செயலாளர் ராஜேந்திரன், வந்தவாசி வட்டத் தலைவர் என்.ராதாகிருஷ்ணன், சிஐ டியு நிர்வாகி பி.கே. முரு கன், பேரூராட்சி கவுன்சி லர் மா.கௌதம்முத்து, விவசாய சங்க மாவட் டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் எஸ். பல ராமன், மாவட்ட துணைச் செயலாளர் எம்.மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் பெரண மல்லூர் சேகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.

    பிறகு, வேளாண் துறை இயக்குநர் கண்ணகி பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பெரணமல்லூர் உதவி இயக்குநர் கோவிந்தராஜன் மீது துறை ரீதியான நட வடிக்கை மேற்கொள்ள சென்னை ஆணையருக்கு கடிதம் எழுதுவதாக வாக்குறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.