சிதம்பரம், ஆக.14-
சிதம்பரம் நகரில் தில்லை யம்மன் கோயில் குளத்தை ரூ.2 கோடியே 75 லட்சத்தில் தூர்வாரி மேம்படுத்தும் பணியை திங்கட்கிழமை (ஆக.14) சென்னை தலை மைச் செயலகத்திலிருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் டி.பரணிதரன் குத்து விளக்கு ஏற்றி பணிகளை தொடங்கி வைத்தார்.