திருவள்ளூர்,ஜூலை 10-
பொன்னேரியை அடுத்த திரு ஆயர்பாடியிலுள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாண வரை உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதாக கூறப்படு கிறது. இதில் மாணவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொன்னேரி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மேலும், உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திங்களன்று(ஜூலை 10)மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.