districts

img

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை இறுதிசெய்ய பேச்சு

திருவண்ணாமலை,மே16- திருவண்ணாமலை மண்டி தெரு, மற்றும் போத்தராஜா, கோயில்  உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை, வெங்காய சந்தை இட நெருக்கடி காரணமாக திருவண்ணா மலை மணலூர்பேட்டை சாலையில் கீழ்அணைக்கரை பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  திருவண்ணாமலை நகரில் சிமெண்ட, இரும்பு, பிளைவுட், பழம், காய்கனி, உள்ளிட்ட தொழிலில் ஈடுபடும் வியாபாரி கள் பல்வேறு சங்கங்களில் இணைந்து  செயல்பட்டு வருகின்றனர்.   மணலூர் பேட்டை சாலை அருகே உள்ள  காய்கறி சந்தையை கட்டமைக்கும் போது லாரிகள் கடையின் முன்பாக வந்து நிற்கும் வகை யிலும் நிற்கும் லாரியிலிருந்து 5 அடியில் பொருட்களை இறக்கும் வகையிலும் கடைகள் கட்டுப்பட்டுள்ளன.  இந்த காய்கறி சந்தைக்கு பெங்களூர், மகாராஷ்டிரா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வெங்காயம், பூண்டு, முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் டன் கணக்கில் வந்து இறங்குவது வழக்கம். இந்த நிலையில் காய்கறிகளை இறக்குவதற்கு டன் ஒன்றுக்கு ரூ.150 என ஒரு லாரியில் 25 டன் வரும் லோடுக்கு சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சுமார் ரூ.3750 வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.  மேலும் லாரி ஓட்டுநர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு  ஒரு டன்னுக்கு ரூ.50 வீதம் 25 டன்னுக்கு சுமார் ரூ.1250  கொடுக்கப்பட்டது. இந்நிலையில், சுமை தூக்கும் தொழி லாளர்கள் டன்னுக்கு கூலியாக  ரூ.100  உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுள்ள னர். கடந்த மூன்று ஆண்டுகளாக கூலி உயர்வு ஏற்றப்படாததால் சில மாதங்க ளுக்கு முன்பு கூலி உயர்வுக்கான  பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என முறையாக சங்கத்தின் மூலம் முறையிடப் பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்பகூலியை உயர்த்தி தரக் வேண்டுமென லாரி உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து  வரும் ஜுன் 10 ஆம் தேதிக்குள் கூலி உயர்வு தொடர்பாக பேச்சு வார்த்தையை நிறைவு செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டுள்ள னர்.  அதுவரை நடைமுறையில் உள்ள அளவின் படி பணிகள் தொடர ஒப்புக்கொள்ளப்பட்டது.

;