districts

தடுப்பூசி மையத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

கூடுவாஞ்சேரி, டிச.18 முதலமைச்சர் மேல்மருவத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றார். அப்போது கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு மெகா கொரோனா தடுப்பூசி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மையத்துக்கு சென்று பார்வையிட்டு தடுப்பூசி போடும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அங்கிருந்தவர்களிடம் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் கொ ரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என அறி வுறுத்திய துடன் நலமும் விசாரித்தார்.

;