தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சேட்டு தலைமையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் சேகரித்த சந்தாவை கட்சியின் கலவை தாலுகா செயலாளர் எஸ். கிட்டுவிடம் வழங்கினர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வரதராஜன், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி. ரகுபதி, ஆரணி மணி, பாலு, கரிமேடு பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.