districts

img

தமிழக அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான மாநில எழுத்தறிவு விருது

பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் “கற்போம் எழுதுவோம்’’ இயக்க செயல்பாடுகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டதற்காக  தமிழக அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான மாநில எழுத்தறிவு விருது மேற்கு தாம்பரத்தில் உள்ள ஒளவை நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெற்ற விழாவில்  இதற்கான விருதினையும் சான்றிதழையும் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.அதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் இரத்தினமலா பெற்றுக்கொண்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்துகொண்ட னர்.

;